முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை: கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'

புதன்கிழமை, 18 மே 2022      இந்தியா
Karala-rain 2022 05 09

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

கேரளா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல சுழற்சி  காரணமாக அடுத்த 4 நாள்களுக்கு மாநிலத்தில் பரவலாக மழை பெய்யும் என்று கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கணித்துள்ளது. 

கடந்த சில நாட்களவே கேரளாவில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நேற்றும் பல பகுதிகளில் கனமழை பெய்தது. பல மாவட்டங்களில் இடைவிடாது மழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை கொட்டி வரும் நிலையில், கேரளாவில் உள்ள 4 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் ( சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் கசர்கோட் ஆகிய மாவட்டங்களுக்கு  ரெட்  அலார்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல்,  திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக  மாநிலத்தின் சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து