முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனர்களுக்கு முறைகேடாக விசா: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது

புதன்கிழமை, 18 மே 2022      தமிழகம்
Karthi 2022-05-18

Source: provided

புதுடெல்லி : சீனர்களுக்கு விசா வழங்க லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனர்களுக்கு விசா வாங்கி தர முறைக்கேட்டில் ஈடுபட்டதாக கார்த்திக் சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்து, காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

சுமார் 250 விசாக்கள் வாங்கித்தருவதாக கார்த்திக் சிதம்பரம் லஞ்சம் பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக சி.பி.ஐ தெரிவித்தது. தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில்  சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ கைது செய்துள்ளது. மேலும் பாஸ்கர ராமனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிபிஐ காவலில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!