முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புவனேஷ்வர்குமார் பந்துவீச்சு ஆட்டத்தின் திருப்பு முனை..! மும்பை எதிரான வெற்றி குறித்து வில்லியம்சன்

புதன்கிழமை, 18 மே 2022      விளையாட்டு
Bhuvaneshwar-Kumar-2022-05-

 ‘பரபரப்பான தருணத்தில் ஆட்டத்தின் 19வது ஓவரில் புவனேஷ்வர் குமாரின் அற்புதமான பந்துவீச்சு, திருப்புமுனையாக அமைந்து, எங்கள் வெற்றிக்கு காரணமாகி விட்டது’ என்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். 

மீண்டும் வெற்றி...

சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘‘சில தோல்விகளுக்கு பிறகு, மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறோம். இத்தொடரில் குறிப்பாக இப்போட்டியில் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம். ராகுல் திரிபாதி இந்த தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். அவர் எப்போதுமே எங்கள் அணியின் ஸ்பெஷல் வீரர். புவனேஷ்வர்குமார் வீசிய 19வது ஓவர், ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்து விட்டது. மெய்டன் ஓவரை வீசி, அதில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தி விட்டார். அந்த ஓவர்தான் எங்கள் வெற்றிக்கு காரணம் என்று சொல்ல வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

வெற்றிக்கு உதவியது...

ஆட்டநாயகன் ராகுல் திரிபாதி கூறுகையில், ‘‘ஒரு ரன், 2 ரன்களாக எடுத்துக் கொண்டே, நல்ல பந்துகளை தேர்வு செய்து, பவுண்டரிகள், சிக்சர்களை அடித்தேன். பும்ரா சிறந்த பவுலர். அவர் சரியான இடத்தை குறி வைத்து, துல்லியமாக பந்து வீசினார். நானும் நன்கு கணித்து ஆடினேன். போட்டியில் வெற்றி என்பதுதான் முக்கியம். அந்த வகையில் எனது ஆட்டம் வெற்றிக்கு உதவியிருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி’’ என்று தெரிவித்தார். மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறுகையில், ‘‘கடைசி 2 ஓவர்களில் வெற்றி எங்கள் பக்கம் இருந்தது. டிம் டேவிட் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். 19வது ஓவரில் புவனேஷ்வர்குமார் நம்ப முடியாத வகையில் பந்து வீசி, வெற்றியை எங்களிடம் இருந்து பறித்து விட்டார்’’ என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து