முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து புதிய அரசாணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வியாழக்கிழமை, 19 மே 2022      தமிழகம்
Ma Subramanian 2022 05 19

அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து புதிய அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் 14 டயாலிசிஸ் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "100 ஆண்டு பழமையான சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையை 200 படுக்கைகளுடன் 40 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு மருத்துவமனையாகவும், ரூ.12 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு என்ற சீமாங் கட்டிடமும் அமைக்கப்படும்.

கிண்டியில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கொரோனா மருத்துவமனை, 60 வயது கடந்த மூத்தோருக்கான மருத்துவமனையாக மாற்றியமைக்கப்படும். இது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை ஒரு மாதத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கிண்டியில் அறிவிக்கப்பட்ட 230 கோடி ரூபாய் மதிப்பிலான பன்னோக்கு அரசு மருத்துவமனையின் கட்டிட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து அரசாணை 354, மற்றும் அரசாணை 293 என 2 அரசாணைகள் உள்ளன. இந்த இரண்டு அரசாணைகளையும் சேர்த்து யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய அரசாணை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து