முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கெட் இழப்பின்றி 210 ரன் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் கே.எல்.ராகுல் - டி காக் சாதனை

வியாழக்கிழமை, 19 மே 2022      விளையாட்டு
19 Ram 54

Source: provided

மும்பை:ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நடந்த லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் - டி காக் ஜோடி 20 ஓவர்களும் விளையாடி 210 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக ஜானி பேர்ஸ்டோவ்-டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி) ஜோடி 185 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

சாதனை முறியடிப்பு...

தற்போது அந்த சாதனையை ராகுல் - டி காக் ஜோடி முறியடித்துள்ளது. இதன் மூலம் இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப்-க்கு அதிக ரன்கள் குவித்த ஜோடிகள் பட்டியலில் ராகுல் - டி காக் ஜோடி முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 140 ரன்கள் எடுத்ததன்  மூலம் டி காக், ஐபிஎல் வரலாற்றில் 3-வது அதிகபட்ச ரன்களை குவித்த வீரர்  என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கிறிஸ் கெய்ல்... 

இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ஹெர்ஷல் கிப்ஸ் ஆகியோர் 2வது விக்கெட்டுக்காக 167 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் ரன் குவிப்பில் கிறிஸ் கெய்ல் 175 ரன்களுடன் முதலிடத்திலும், பிரண்டன் மெக்கல்லம் 158 ரன்களுடன் 2 வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து