முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை: ரணில் அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      உலகம்
Sri-Lanka 2022-05-20

Source: provided

கொழும்பு : இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். 

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடியை கண்டித்து இலங்கையில் மக்களின் போராட்டம் நீடித்து வருகிறது. கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் கொழும்பு முழுவதும் வன்முறை பரவியது.

தொடர்ந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். 4-வது முறையாக இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுள்ளார். இருப்பினும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகக் கோரி காலேவில் போராட்டம் நீடித்து வருகிறது. 

இந்த நிலையில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். அதன்படி, துறைமுகங்கள் கப்பல்கள், விமான சேவைத்துறை அமைச்சராக நிமல் சிறிபால டிசில்வா பதவியேற்றுள்ளார்.  கல்வித்துறை அமைச்சராக சுசில் பிரேமஜயந்த, சுகாதாரத்துறை அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல-வும் பதவியேற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து விஜேதாச ராஜபக்சே நீதித்துறை அமைச்சராகவும், ஹரீன் பெர்ணாண்டோ சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். ரமேஷ் பத்திரண, மனுஷ நாணயக்கார, நவீன் பெர்ணாண்டோ, டிரான் அலஸ் ஆகியோரும் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். ஏற்கனவே 4 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் தற்போது மேலும் 9 பேர் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து