முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் முறையாக ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் ஜோபைடன்

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      உலகம்
Joe-Biden 2022 02 19

Source: provided

வாஷிங்டன் : ஜோபைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு ஆசிய நாடுகளுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறார். 

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பானில் வருகிற 24-ம் தேதி நடைபெற உள்ளது.

குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜப்பான் செல்ல உள்ளார். முன்னதாக நேற்று தென் கொரியா சென்ற அவர், தென் கொரிய அதிபர் மற்றும் அதன் பிறகு ஜப்பான் பிரதமரை சந்தித்து பல்வேறு முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். 

அமெரிக்க அதிபராக அதிபர் ஜோபைடன் பொறுப்பேற்ற பிறகு ஆசிய நாடுகளுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!