முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு: லாலு பிரசாத், அவரது மகள் வீடுகளில் சி.பி.ஐ சோதனை : டெல்லி உள்ளிட்ட 17 இடங்களில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      இந்தியா
Lalu-Prasad 2022-05-20

Source: provided

பாட்னா : ரெயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக, பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகள் வீடுகளில் நேற்று 17 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது 2004ம் ஆண்டு லாலுபிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக பதவி வகித்தார். அப்போது ரெயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. ரெயில்வே வேலை பெற முயற்சித்தவர்களிடம் இருந்து அவர் நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதையடுத்து லாலு பிரசாத் யாதவ் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் புதிய லஞ்ச வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். அதே போல் லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி மீதும் போலீசார் புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்த கால கட்டத்தில் இந்த நில மோசடி நடந்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் புதிய வழக்கு தொடர்பாக லாலுபிரசாத் யாதவ் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். டெல்லி, பீகாரில் உள்ள 17 இடங்களில் இந்த சோதனை நடந்தது. சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று நேற்று காலை முதல் ஒரே நேரத்தில் இந்த அதிரடி சோதனையை நடத்தினார்கள். 

பீகாரில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீடு, அவரது மகள் மிசாபாரதி வீடு ஆகிய இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். பீகார் தலைநகர் பாட்னாவில் மட்டும் 4 இடங்களில் இந்த சோதனை நடந்தது.மேலும் லாலுபிரசாத் உறவினர்கள் வீடுகள், அவருடன் தொடர்புடைய அலுவலகங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று காலை தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்றது.

லாலுபிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ஏற்கனவே ஓட்டல்களுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு செய்ததாக அவர் மீது கடந்த 2017ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்திருந்தது. உரிமம் வழங்கியதற்காக கைமாறாக 3 ஏக்கர் நிலத்தை அவரும், அவரது குடும்பத்தினரும் வளைத்ததாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டி இருந்தது. இந்த நிலையில் ரெயில்வே பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக புதிய வழக்கை பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

1991-ம் ஆண்டு 1996-ம் ஆண்டு பீகார் முதல்வராக இருந்தார் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ். லாலு ஆட்சிக் காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக அரசு கருவூலங்களில் இருந்து ரூ. 950 கோடி பணம் மோசடியாக பெறப்பட்டது என்பது வழக்கு. இதுதொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டன. இதுவரை 5 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு 19 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 5-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம். லாலு பிரசாத் யாதவுக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த மாதம் தான் லாலு ஜாமீனில் வெளிவந்தார்.

இத்தகைய சூழலில் அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிந்து சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தமுறை, அரசுப் பணி நியமனங்களில் முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் யாதவ் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து