முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் : 28-ம் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சனிக்கிழமை, 21 மே 2022      தமிழகம்
anbumani-2022-01-06

Source: provided

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட உள்ளார். அதற்கான அறிவிப்பு வரும் 28-ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

வட மாவட்டங்களில் கனிசமான வாக்குவங்கி வைத்துள்ள பா.ம.க, 2016 சட்டப்பேரவைத் தேர்தலை மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற முழக்கத்துடன் தனித்து சந்தித்தது. அதில்  முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி உட்பட அனைவரும் தோல்வி அடைந்தனர். இது கட்சியினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. 

இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு வியூகங்களை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் மூத்த நிர்வாகிகள் வகுத்துள்ளனர். முதல்கட்டமாக, உள்ளாட்சிகளில் கட்சியைப் பலப்படுத்த முடிவு செய்துள்ளனர். அதற்காக, கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணியை கட்சித் தலைவராக கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 28-ம் தேதி சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடைபெறும் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் வெளியாக உள்ளது. 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில, மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு கட்சித் தலைவர் ஜி.கே.மணி அழைப்பு விடுத்துள்ளார். அதே சமயம், கட்சித் தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகளானதையொட்டி, அவருக்கு வரும் 24-ம் தேதி சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!