முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெஞ்சுக்கு நீதி விமர்சனம்

சனிக்கிழமை, 21 மே 2022      சினிமா
Ne  cukku-niti 2022-05-21

Source: provided

ருண் ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தின் தலைப்பான ‘நெஞ்சுக்கு நீதி’ யை படத்துக்கு வைத்துள்ளது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. கதை, காவல் அதிகாரியான உதயநிதி ஸ்டாலின் பணிமாற்றம் செய்யப்பட்டு பொள்ளாச்சிக்கு வருகிறார். அங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்படுகிறார்கள். மூன்றாவது சிறுமி என்ன ஆனார் என்று தெரியவில்லை.இந்த வழக்கை விசாரிப்பதற்காக உதயநிதி ஸ்டாலின் களத்தில் இறங்குகிறார். ஆனால் அவரை சுற்றியிருக்கும் காவல் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அந்த வழக்கை விசாரிக்க விடாமல் தடுத்து சூழ்ச்சி செய்கிறார்கள். இந்த சூழ்ச்சிகளை தாண்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்ததா? மூன்றாவது சிறுமிக்கு என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை. காவல்துறை அதிகாரியாக வரும் உதயநிதி ஸ்டாலின் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். திரைத்துறைக்கு வந்த 10 ஆண்டுகளில் சமூக நீதி பேசும் ஒரு படத்தில் கச்சிதமான நடிப்பைக் கொடுத்துள்ளார் உதய். கதாநாயகியாக தாண்யா வரும் காட்சிகள் அழகு. இன்ஸ்பெக்டராக வரும் சுரேஷ் சக்ரவர்த்தி நடிப்பில் மிரட்டி உள்ளார். ஆரி, இளவரசு மற்றும் மயில்சாமியின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஜாதியை வைத்து அரசியல் செய்து பிழைப்பவர்களை சாடியிருக்கிறார்கள்; அதற்காகவே உதயநிதியை பாராட்டலாம். பல மர்ம கொலைகளை போலீசார் எப்படி தற்கொலையாக, ஆணவ கொலையாக சித்தரிக்க முயல்கின்றனர் என்பதை பார்க்கும் போது அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிர்களும் சமம். ஆணவத்தால் இனி ஒரு கொலை கூட நடக்க கூடாது என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அருண் ராஜா காமராஜ். திபு நினன் தாமஸின் இசை அருமை. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். மொத்தத்தில் நெஞ்சுக்கு நீதி – விறுவிறுப்பு

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து