முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனில் வெளியாகும் பவுடர் பட பாடல்

சனிக்கிழமை, 21 மே 2022      சினிமா
Nikhil-Murugan 2022-05-21

Source: provided

கடந்த 27 வருடங்களாக தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி என  பல்வேறு மொழிகளில் மக்கள் தொடர்பாளராக சிறந்து விளங்கி வரும் நிகில் முருகன் பவுடர் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். சாருஹாசன் நடித்த தாதா 87 திரைப்படத்தை இயக்கியவரும், வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வருபவருமான விஜய் ஸ்ரீ ஜி, இந்த பவுடர் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பலரது பாராட்டை பெற்றிருந்த நிலையில், ரத்த தெறி தெறி எனும் இப்படத்தின் முதல் பாடல் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. பவுடர் திரைப்படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரி ராகவன் என்.எம் ஆக நிகில் முருகன் தோன்றியுள்ளார். லியாண்டர் லீ மார்ட் இசையமைத்துள்ள ரத்த தெறி தெறி பாடல் சிங்கப்பூரில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலின் கூடுதல் புரோகிராமிங்கை லத்வியாவில் உள்ள தி பேக்யார்டு ஸ்டூடியோசில் நீல் செய்ய, இசைக்கோர்வை மற்றும் மாஸ்டரிங்கை இந்தோனேசியாவின் அகெளஸ்டிக் ஆடியோவில் டாரென் விக் செய்துள்ளார். வித்யா பிரதீப், அனித்ரா நாயர், சாந்தினி தேவா, 'மொட்டை' ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன், 'சில்மிஷம்' சிவா, விக்கி ஆகியோர் நடித்துள்ள பவுடர் படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கி ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார், ஜி மீடியா பேனரில் ஜெயஸ்ரீ விஜய் தயாரித்துள்ளார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படம் விரைவில் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து