முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலிவுட்டில் அறிமுகமாகும் காஜல் சவுகான்

சனிக்கிழமை, 21 மே 2022      சினிமா
Kajal-Chauhan 2022-05-21

Source: provided

எம். ஜெ ரமணன் இயக்கத்தில் ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் நகைச்சுவை திரைப்படம் ஷூட்டிங் ஸ்டார். எம் ஜெ ரமணன், ஜானி டூகல், வினம்பர சாஸ்திரி ஆகிய மூவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர் இந்த படத்தில் காஜல் சவுகான் இரண்டாவது முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த், ரவி கிஷன் மற்றும் மசூம் சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில்  நடைபெற்றது. இந்த படம் ஒரு நகைச்சுவை கலந்த படமாகவும் ,படத்தின் இறுதியில் பார்வையாளர்களை கண்ணீர் சிந்த வைக்கும் படமாகவும் இருக்கும் என இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிக்கும் காஜல் சவுகான் பல இசை வீடியோக்களில் நடித்துள்ளார் , இவரது இசை ஆல்பம் வீடியோக்கள் யூடியூபில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. தற்போது கோலிவுட்டில் அறிமுகமாகும் காஜல் சவுகான் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் நல்ல கதைகள் மற்றும் வாய்ப்புகளுக்கு காத்திருப்பதாகக் மகிச்சியுடன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!