முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 963 பேர் ரஷ்யாவுக்குள் நுழைய தடை

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2022      உலகம்
Putin 2022 02 26

Source: provided

மாஸ்கோ : அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உறவினர்கள் உள்பட 963 பேர் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் மேற்கொண்டுள்ள படையெடுப்பு 3 மாதங்களை எட்ட இருக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வேண்டுகோள் விடுத்தன. ஆனால், ரஷ்யா இதற்கு உடன்படவில்லை. உக்ரைனும் பதிலடி கொடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களை அளித்து வருகிறது.

கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடும் செய்து வருகிறது. இதுதவிர, ரஷ்யாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்து வருகிறது. போரால் கோதுமை, சோளம் போன்ற உணவு பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்யா மீது தொடர்ச்சியாக அமெரிக்க தடைகளை விதித்து வரும் சூழலில் அதற்கு பதில் நடவடிக்கையாக, ரஷ்ய கூட்டமைப்புக்குள் நுழைவதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்ட அமெரிக்க குடிமகன்களின் பட்டியலை ரஷ்ய அரசு வெளியிடுகிறது என தெரிவித்து உள்ளது. 

ரஷ்ய நாடு மற்றும் ரஷ்யர்களுக்கு எதிராக வெறுப்பு கொண்டவர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போகிற தனிநபர்கள் இந்த பட்டியலில் வருகிறார்கள். இதில், அமெரிக்க பொதுமக்கள் வருவதில்லை. அவர்கள் எப்போதும் எங்களால் மதிக்கப்படுகிறார்கள் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டு உள்ளது. இதன்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது உறவினர்கள் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் மேலாளர்கள் உள்பட அமெரிக்க தனிநபர்கள் 963 பேர் ரஷியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து