முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2022      உலகம்
Israel-Monkey 2022-05-22

Source: provided

ஜெருசலேம் : இஸ்ரேல் நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 

ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன் மற்றும் இங்கிலாந்து ஆகிய 3 நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு தெரிய வந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இவை தவிர்த்து, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இதன் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. 

 இந்த நோய் பாதிப்பு பெருமளவில் எலிகள் போன்ற வன விலங்குகளிடம் காணப்படுகிறது. அவற்றில் இருந்து மனிதர்களுக்கு பரவ கூடும் என கூறப்படுகிறது. இதன் பாதிப்புகள் பெரிய அம்மை நோயாளிகளுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட அறிகுறிகளை ஒத்திருக்கின்றன. இதுவரை 11 நாடுகளில், 80 பேருக்கு இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 50 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை.

கண்காணிப்பு பணிகளை விரிவுபடுத்தும்போது, இந்த பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. 

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேற்கு ஐரோப்பாவில் இருந்து இஸ்ரேல் வந்த 30 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறிக்கான சந்தேகம் இருந்துள்ளது.

இதனால், டெல் அவிவ் நகரில் உள்ள இசிலோவ் மருத்துவமனைக்கு சென்று அவர் பரிசோதனை செய்துள்ளார். இதில், அவருக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு முழு அளவில் மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ கண்காணிப்பில் வைப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து