முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலைப்பாதைகள் அமைக்கும் பணி குறித்து ஆய்வு: வெள்ளியங்கிரியில் சிவபெருமானை தரிசித்த அமைச்சர் சேகர்பாபு

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2022      தமிழகம்
Sekarbapu 2022-05-22

Source: provided

கோவை : கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி வெள்ளிங்கிரி மலை உள்ளது. இங்கு சுயம்பு வடிவிலான சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார். சுவாமியை தரிசிக்க தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.  குறிப்பாக ஜனவரி முதல் வாரத்திலிருந்து மே மாத இறுதி வாரம் வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் மலைப்பாதை அமைக்கும் பணிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்தார். அவர் அடிவாரப் பகுதியில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மை ஆகியோரை வணங்கி விட்டு, கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது கோவிலின் தேவைகள் குறித்தும், பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு வரும் அடிப்படை தேவைகள் குறித்தும், அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பக்தர்கள் தங்கும் கூடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக வசதிகள் போன்றவை குறித்தும் பக்தர்கள் மற்றும் அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் அவர் வெள்ளிங்கிரி மலையேறினார்.

இந்த மலையானது மிகவும் உயரமானது. செங்குத்தாக காணப்படும் மலையாகும். 7 மலைகளை கடந்து சென்றே பக்தர்கள் சிவபெருமானை தரிசித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று அமைச்சர் சேகர்பாபுவும் 7 மலைகளை கடந்து சென்று சிவபெருமானை தரிசித்தார்.

  மலையேறி செல்லும் வழியில் உள்ள மலைப்பாதைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதையும் பார்வையிட்டவாறே அவர் மலையேறினார். அப்போது அவருடன் வனத்துறை ஊழியர்களும் பாதுகாப்புக்கு சென்றனர். இந்த ஆய்வின் போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் செந்தில் வேலவன் துணை ஆணையர் ஆனந்தன், கோவை மண்டல உதவி ஆணையர் கருணாநிதி, பூண்டி கோவில் செயலாளர் சந்திரமதி, மற்றும் பேரூர் வட்டார டி. எஸ்.பி., திருமால் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து