முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரே நாளில் 2,226 பேருக்கு தொற்று

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2022      இந்தியா
india-corona-2022-05-19

Source: provided

புது டெல்லி : கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  நேற்று முன்தினம் பாதிப்பு 2,323 ஆக இருந்த நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 36 ஆயிரத்து 371 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பால் மேலும் 65 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 63 மரணங்கள் அடங்கும். இது தவிர உத்தரபிரதேசம், டெல்லியில் தலா ஒருவர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,413 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 25 லட்சத்து 97 ஆயிரத்து 3 பேர் குணமடைந்துள்ளனர்.  தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 14,955 ஆக சரிந்துள்ளது

. இது நேற்று முன்தினத்தை விட 41 குறைவு ஆகும். நாடு முழுவதும் இதுவரை 192 கோடியே 28 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.   இதற்கிடையே நேற்று முன்தினம் 4,42,681 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 84.67 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து