முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி ஒரு கிலோ ரூ. 110 : மற்ற காய்கறிகள் விலையும் எகிறியது

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2022      தமிழகம்
Tomato 2022-05-22

Source: provided

சென்னை : கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், மற்ற காய்கறிகள் விலையும் அதிகரித்திருந்தது. 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தினமும் 600 வாகனங்களில் 6,000 டன் காய்கறிகள் வந்த நிலையில், மழை மற்றும் வரத்து குறைவால் நேற்று காலை 400 வாகனங்களில் 4,500 டன் குறைவான காய்கறிகள் வந்தன. இதன்காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. 

நேற்று காலை ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 110- க்கும், அவரைக்காய் ரூ. 80-க்கும், கேரட் ரூ. 35-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னை புறநகரில் உள்ள சில்லறை கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 120-க்கும், கேரட் ரூ. 45-க்கும், அவரைக்காய் ரூ. 90-க்கும், நாட்டு தக்காளி ரூ. 110-க்கும், பெங்களூரூ தக்காளி ரூ. 130-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் காய்கறி  வியாபாரிகளின் தலைவர் முத்துகுமார் கூறுகையில், 

மழை மற்றும் வரத்து குறைவால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.  இதனால் தக்காளி, பீன்ஸ் ஒரு கிலோ ரூ. 110-க்கு   விற்பனை செய்யப்படுகிறது. கேரட், அவரைக்காய் விலையும் அதிகரித்துள்ளது. அதிக விலையில்  காய்கறிகள் விற்பனை செய்யபடுவதால் காய்கறிகளை வாங்க எளிய மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தக்காளி விலையை குறைக்க அண்ணாநகர், முகப்பேர், அடையாறு ஆகிய பகுதிகளில் சென்னை பசுமை பண்ணை கடைகளில் குறைவான விலையில் தக்காளிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தை கோயம்பேடு மார்க்கெட்டிலும் ஏற்படுத்தி கொடுத்தால் எளிய, மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து