முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 3 பேருக்கு கொரோனா: அண்ணா பல்கலை.யில் பாதிப்பு 9 ஆக உயர்ந்தது

புதன்கிழமை, 25 மே 2022      தமிழகம்
Anna-University 2021 07 28

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னதாக, சென்னை ஐ.ஐ.டி.யில் 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் கொரோனா தொற்று பரவியுள்ளது. நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அவா்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டன. இதையடுத்து அவா்களுடன் தொடா்பில் இருந்த 160 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து அந்த 9 பேருக்கும் லேசான அறிகுறி இருப்பதால் பல்கலைக்கழக வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!