முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவில் பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடியவரை சுட்டுக் கொன்ற போலீசார்

சனிக்கிழமை, 28 மே 2022      உலகம்
Canada-School 2022-05-28

கனடா நாட்டின் டொரோண்டோ நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை சுற்றி வளைத்த போலீசார் அவரை சுட்டுவீழ்த்தினர். 

கடந்த 25-ம் தேதி அன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றுக்குள் 18 வயது இளைஞர் புகுந்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தி 19 சிறுவர்கள் உள்பட 21 பேரை கொன்று குவித்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கனடா நாட்டின் டொரோண்டோ நகரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு அருகே இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நடமாடி கொண்டிருந்தார். இதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த 3 தொடக்கப் பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன. பின் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அந்த இடைத்திற்கு விரைந்து வந்து துப்பாக்கியுடன் நடமாடிய நபரை சுற்றிவளைத்தனர். பின்னர் போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!