முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் வெள்ளியன்று வெளியாகும் விக்ரம்

சனிக்கிழமை, 28 மே 2022      சினிமா
Vikram 2022-05-28

Source: provided

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளன்று விக்ரம் படம் வெளியாகிறது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது. இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமலஹாசன் கலந்து கொண்டனர். அப்போது கமலிடம் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளன்று விக்ரம் படம் வெளியாவது ஏன் என கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர், சினிமாகாரனாக கலைஞரைப் பற்றிப் பேச ஆயிரம் உள்ளது.  இது யாதார்த்தமான ஒரு நிகழ்வு. இதன் பின்னர் திட்டமிடல் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி பல சாதனைகளை படைத்துள்ளது. இப்படத்தில் கமலஹாசன் ஒரு இளைஞனைப் போல அதை எனர்ஜியுடன் காணப்படுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து