முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமான வரி வழக்கை ரத்து செய்ய கோரிய நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

சனிக்கிழமை, 28 மே 2022      சினிமா
SJ-Surya 2022-05-28

வருமான வரி வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. 

கடந்த 2015- ம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா மீது வருமான வரித்துறை சார்பில் ஆறு வழக்குகள் தொடரப்பட்டன. இதனை ரத்து செய்யக் கோரி, எஸ்.ஜே.சூர்யா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, வருமான வரி கணக்குக்கான மறு மதிப்பீட்டு நடைமுறைகள் நிலுவையில் இருப்பதால், வழக்குகளை ரத்து செய்யக் கோரி, எஸ்.ஜே.சூர்யா சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், முறையான சோதனைக்கு பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக, வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாததால் எஸ்.ஜே சூர்யா இந்த வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறி வழக்கை ரத்து செய்யக் கோரிய அவரது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!