முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் வெயிலின் தாக்கம் சில நாட்களுக்கு அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சனிக்கிழமை, 28 மே 2022      தமிழகம்
Sun 19-04-2022

அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அக்னி நட்சத்திரம் தொடங்கிய கடந்த 4-ம் தேதி முதலே வெயில் வாட்டியது. எனினும் ஒரு வாரத்திலேயே சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் பெய்தது. இந்தாண்டு அக்னி நட்சத்திரத்தில் கடந்த 6ம் தேதி வேலூரில் அதிகபட்சமாக 105.98 டிகிரி வெப்பம் பதிவானது. எனினும், அசானி புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் ஆகிய காரணங்களால் தமிழகத்தின் பல பகுதிகளில் அக்னி நட்சத்திர கால கட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தது. 

இதனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திர கோடை காலத்தில் முதல் 2 வாரங்களுக்கு வெப்பம் தணிந்தே காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. சென்னையில் அதிகபட்சமாக கடந்த 23 மற்றும் 24ந்தேதிகளில் 104 டிகிரி வெப்பம் பதிவானது. மே 24-ம் தேதி தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது. 

சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று முன்தினம் காலை 102.38 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 100.94 டிகிரியும் வெப்பம் பதிவாகி இருக்கிறது. அக்னி நட்சத்திரம் நேற்றோடு முடிவடைந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து