முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசவிரோத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கவேண்டும்: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சனிக்கிழமை, 28 மே 2022      தமிழகம்
DMK office-2022 03 03

தேசவிரோத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கவேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர் / பொறுப்பாளர்கள்கள் கூட்டம் நேற்று காலை 10.30 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கத்தில்" நடைபெற்றது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் திமுக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விவரங்கள்: - தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர், தங்கள் அயராத உழைப்பாலும், தமது குருதி - வியர்வையைக் கொட்டியும், பண்படுத்தி வைத்துள்ள தமிழ் நிலத்தில், சமூகநீதியும் மதநல்லிணக்கமும் செழித்துச் சிறந்திருப்பதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள இயலாமல்; மதவாத நச்சு விதைகளைத் தூவிட எத்தனிக்கும், தேச விரோத - அபாயகர சக்திகளையும், அவர்களுக்குத் துணை போகும் அடிமைகளையும், விலை போகும் வீணர்களையும் அடையாளம் காட்டி, அவர்களிடமிருந்து தாய்த் தமிழ்நாட்டை எந்தவித சேதாரமும் இன்றி, பாதுகாத்திடும் புதிய பட்டாளத்து சிப்பாய்களின் அணிவகுப்பை உருவாக்கிடும் வகையில், 'திராவிட மாடல் பயிற்சிப் பாசறை'க் கூட்டங்களை வெற்றிகரமாகவும் தொடர்ச்சியாகவும் நடத்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு அரணாக நிற்க வகை செய்வோம் எனக் கழக மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்களின் இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானம் செய்து உறுதி ஏற்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!