முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த சீசன் ஐ.பி.எல் போட்டியில் முதல்முறையாக 8 சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்கள்..!

சனிக்கிழமை, 28 மே 2022      விளையாட்டு
Batsmen 2021-12-28

ஐ.பி.எல் போட்டியின் வரலாற்றில் ஒரு பருவத்தில் முதல்முறையாக 8 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. 

ரஜத் படிதார்...

ஐ.பி.எல் போட்டியின் பிளேஆஃப் சுற்றில் ராஜஸ்தானும் ஆர்சிபியும் மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் அணி. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. ரஜத் படிதார் மீண்டும் சிறப்பாக விளையாடி 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்தார். 

பட்லர் 106 ரன்கள்...

பிரசித் கிருஷ்ணா, ஒபட் மெக்காய் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ராஜஸ்தான் அணி, 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. பட்லர், 60 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மொத்தம் 4 சதங்கள் ... 

இந்த வருட ஐ.பி.எல் போட்டியில் இத்துடன் 4 சதங்கள் அடித்துள்ளார் பட்லர். ஐ.பி.எல் 2022 போட்டியில் இதுவரை 8 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு ஐ.பி.எல் போட்டியிலும் இத்தனை சதங்கள் அடிக்கப்பட்டதில்லை. இதற்கு முன்பு 2016-ல் 7 சதங்கள் அடிக்கப்பட்டன. மேலும் 2008, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் தலா 6 சதங்கள் அடிக்கப்பட்டன.  இந்த வருடம் பட்லர் 4 சதங்களும் ராகுல் 2 சதங்களும் ரஜத் படிதார், டி காக் ஆகியோர் தலா ஒரு சதமும் அடித்துள்ளார்கள். 

ஐ.பி.எல் போட்டியில் அதிக சதங்கள்

  • 1) 8* சதங்கள் - 2022.
  • 2) 7 சதங்கள் - 2016.
  • 3) 6 சதங்கள் - 2008, 2011, 2012.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து