முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது: இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2022      சினிமா
S P Muthuraman 2021-12-29

Source: provided

சென்னை : தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது  வழங்கப்படும் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது.  விருதாளரை தேர்வு செய்ய திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமனை தலைவராகவும், நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட தேர்வுக்குழுவினை அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது  வழங்கப்படும் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு, கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதை 2022-ம் ஆண்டு ஜூன் 3-ம் நாள் அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்க ஏதுவாக, விருதாளரை தேர்வு செய்ய திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமனை தலைவராகவும், நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட தேர்வுக்குழுவினை அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.

தேர்வுக்குழுவால் பரிந்துரைக்கப்படும் விருதாளருக்கு விருதுத் தொகையான ரூ.10 லட்சம் மற்றும் நினைவுப்பரிசு ஆகியவற்றினை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3-ம் நாளன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவிப்பார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து