முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வியட்நாமுக்கு 3 நாள் பயணம் மேற்கொள்கிறார் ராஜ்நாத் சிங்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2022      இந்தியா
Rajnath-Singh-2022-02-24

Source: provided

புது டெல்லி : மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வியட்நாம் நாட்டுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது முக்கிய நிகழ்வாக ராஜ்நாத் சிங் 12 அதிவேக பாதுகாப்பு படகுகளை வியட்நாமுக்கு ஒப்படைப்பார் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஹனோயில் உள்ள மறைந்த அதிபர் ஹோ சி மின்னின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தமது பயணத்தைத் தொடங்குகிறார். ராஜ்நாத் சிங், வியட்நாம் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெனரல் பான் வான் ஜியாங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார். இரு அமைச்சர்களும் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அப்போது ஆய்வு செய்வார்கள்.

இந்த பயணத்தின் போது தொலைத்தொடர்பு பல்கலைக் கழகம் உட்பட வியட்நாமின் பயிற்சி நிறுவனங்களையும் ராஜ்நாத் சிங் பார்வையிடுகிறார். இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்விலும் அவர் கலந்து கொள்கிறார். பாதுகாப்புத்துறை அமைச்சர் வியட்நாம் அதிபர் நுயென் சுவான் பூக் மற்றும் பிரதமர்  பாம் மின் சின் ஆகியோரையும் ராஜ்நாத்சிங் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!