முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்தமான் அருகே நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2022      இந்தியா
Earthquake 2021 07 03

Source: provided

போர்ட்பிளேர் : வங்கக்கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுக்கு அருகே நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 எனப் பதிவாகி உள்ளது.  

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் போர்ட் பிளேரில் இருந்து 302 கி.மீ தொலைவில் கடலுக்கு அடியில் 40 கி.மீ ஆழத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது  ரிக்டர் அளவுகோலில் 4.6 அலகுகளாக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம்  தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் யாரும் காயமடைந்ததாகவோ, பொருள் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!