முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முடிவை மாற்றிய உதயநிதி

திங்கட்கிழமை, 6 ஜூன் 2022      சினிமா
Uthayanidhi 2022-06-06

Source: provided

தயாரிப்பாளர், விநியோகஸ்தர் சட்டமன்ற உறுப்பினர்  நடிகர் என பன்முகம் கொண்டவரான உதயநிதி ஸ்டாலின் இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் இவர் நடிக்கும் கடைசி படம் எனப் பேசப்பட்டது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிவிழா நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த விழாவில் பங்கேற்றனர். இதில் பேசிய உதயநிதி, “நான் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்யவில்லை. நல்ல கதை எனக்கு கிடைத்தால் நான் தொடந்து நடிப்பேன். என்னால் அரசியலையும், சினிமாவையும் சமாளித்துக்கொள்ள முடியும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து