முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நானி நடிக்கும் அடடே சுந்தரா

திங்கட்கிழமை, 6 ஜூன் 2022      சினிமா
Nani-Nasria 2022-06-06

Source: provided

தெலுங்கின் முன்னணி நடிகர் நானியும், மலையாள நடிகை நஸ்ரியாவும் நடித்திருக்கும் ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நானி, “அடடே சுந்தரா படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஷ்யாம் சிங்கா ராய் போன்ற ஆக்சன் படங்களில் நடித்துவிட்டு, ‘அடடே சுந்தரா’ போன்ற நகைச்சுவையும், காதலும் கலந்த திரைக்கதையில் நடிப்பது பொருத்தமான தேர்வு என நினைக்கிறேன். ரசிகர்களுக்கும் நிச்சயம் இது பிடிக்கும். படத்தின் கதை, தெலுங்கு, தமிழ், மலையாளம் என மொழி கடந்து அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஜூன் 10ஆம் தேதியன்று வெளியாகும் இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றார். அவரைத் தொடர்ந்து நஸ்ரியா பேசுகையில், இந்தப் படத்தில் நானி உடன் இணைந்து பணியாற்றியது மகிழ்வான அனுபவமாக இருந்தது. காதல் கதைக்கு ஊக்கமும், ஆதரவும் அளித்து வரும் தமிழ் ரசிகர்கள் ‘அடடே சுந்தரா’ படத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதலும் நகைச்சுவையும் கலந்து உருவாகியிருக்கும் ‘அடடே சுந்தரா’ படத்திற்கு ஆதரவு தாருங்கள்” என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து