முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 777 சார்லி

திங்கட்கிழமை, 6 ஜூன் 2022      சினிமா
777-Charlie 2022-06-06

Source: provided

777 சார்லி’ கன்னட படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் வெளியிடுகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி தற்போது ‘777 சார்லி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சார்லி என்ற நாயுடனான அன்பை சொல்லும் நகைச்சுவைப் படமாக உருவாகியிருக்கும்  இப்படத்தில் நடிகர் பாபி சிம்ஹா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெளியாகும் முன்னே எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ள இப்படத்தை கிரண்ராஜ் இயக்கியுள்ளார்.  எதிர்பார்ப்புகளுக்குக் காரணம், கன்னடம், தெலுங்கு , மலையாளம், இந்தி, தமிழ் என 5 மொழிகளில் வெளியாகும், இப்படத்தை நடிகர் பிரித்விராஜ் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக மலையாளத்தில் வெளியிடப்போவதாக நேற்று அறிவித்தார். “சார்லி ஒரு அழகான படம். மனிதனுக்கும் ஒரு அற்புதமான குழந்தைக்கும் இடையிலான நிபந்தனையற்ற அன்பை சொல்லும் படம். இப்படத்தை தமிழில் வழங்குவதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் கூறியுள்ளார்.   இப்படத்தின் ட்ரைலர் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை வெளியாகவிருக்கிறது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து