முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த படத்திற்கு ரெடியான லெஜண்ட் சரவணன்

திங்கட்கிழமை, 6 ஜூன் 2022      சினிமா
Saravanan 2022-06-06

Source: provided

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தற்போது நடித்துள்ள படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இநிலையில் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தொழிலதிபர் சரவணனின் தி லெஜண்ட் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஊர்வசி ரவுத்தேலா, சுமன், கீதிகா, புகழ், பிரபு, மறைந்த விவேக், விஜயகுமார், யோகி பாபு, வம்சி கிருஷ்ணா மற்றும் நாசர் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாக  உள்ளார். இப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு வேல்ராஜ், படத்தொகுப்பு ரூபன். கலை இயக்குநராக எஸ்.எஸ்.மூர்த்தியும், நடன அமைப்பாளர்களாக ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனலெஜண்டின் பாடல்களை பாடலாசிரியர்களான கபிலன், பி.ஆர்.விஜய், சினேகன், மதன் கார்க்கி மற்றும் வைரமுத்து ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் நாயகன் தி நியூ லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷனின் முதல் தயாரிப்பு முயற்சியாக  இப்படம் உருவாகியுள்ளது.  இந்த படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்புக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு  சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த  விழாவில் பேசிய லெஜண்ட் சரவணன் நிச்சயம் இரண்டாவது படத்தில் நடிப்பேன் என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து