முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை மிரட்டல் கடிதம் எதிரொலி: நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

திங்கட்கிழமை, 6 ஜூன் 2022      சினிமா
Salman-Khan 2022-06-06

Source: provided

மும்பை : கொலை மிரட்டல் கடிதம் எதிரொலி காரணமாக நடிகர் சல்மான் கானுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அதிகரித்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சல்மான்கான் தன்னுடைய குடும்பத்துடன் பாந்திரா பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கேலக்சி என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சல்மான் கானின் தந்தை சலீம்கான் வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்ற போது, அவர் வழக்கம் போல் அமரும் இடத்தில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அந்த கடிதத்தை பிரித்து படித்த போது அதில் சல்மான் கான் மற்றும் அவரது தந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து சல்மான் கான், மற்றும் அவரது தந்தை சலீம் கான் கடிதத்துடன் பாந்திரா போலீஸ் நிலையம் வந்தனர். தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கடிதத்தை போலீசாரிடம் கொடுத்து புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சல்மான் கானுக்கு வந்த மிரட்டல் கடிதத்தை அடுத்து அவரின் பாதுகாப்பை மகாராஷ்டிராவின் உள்துறை நேற்று மேலும் பலப்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து