முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெப்போ விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் அதிகரிக்க வாய்ப்பு

புதன்கிழமை, 8 ஜூன் 2022      இந்தியா
Reserve-Bank 2022-06-05

Source: provided

மும்பை : வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான (ரெப்போ) வட்டி விகிதம் 0.5% ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அடிப்படை வட்டி விகிதம் 4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் அடிப்படை வட்டி விகிதம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.  இந்தநிலையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகவும். தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும் தாங்கள் மக்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அக்கூட்டத்தின் முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது., உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக உலகப் பொருளாதார மீட்சி பாதிக்கப்பட்டுள்ளது. விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சர்வதேச அளவில் நுகர்வுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பதற்கு பெரும்பகுதி உக்ரைன் போர் காரணமாக இருக்கலாம். போரால் விநியோக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் பணவீக்கம் 6.7% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 5.7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டது. பணவீக்க மதிப்பீடு இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் இந்த உயர்வு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

பணவீக்கம் உயரும் ஆபத்து தொடர்கிறது. தக்காளி விலையின் சமீபத்திய அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை பணவீக்கத்தை தூண்டியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேல் இருக்கும். பணவீக்கத்தை எதிர்பார்க்கப்படும் அளவுக்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தப்படும். 

தற்போதைய உக்ரைன் போர் மற்றும் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தபோதிலும் இந்தியப் பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் இருக்கிறது. பொருளாதார மீட்சி வேகத்தை எட்டியுள்ளது. ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என்ற கணபிப்பில் மாற்றம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து