முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை 18-ம் தேதி ஜனாதிபதி தேர்தல்: வரும் 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் - ஜூலை 21-ல் வாக்கு எண்ணிக்கை

வியாழக்கிழமை, 9 ஜூன் 2022      இந்தியா
Rajiv-Kumar-Chief-Election-

ஜூலை 18-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 15-ம் தேதி தொடங்கும் என்றும், ஜூலை 21-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 24-ல் முடிகிறது...

புதுடெல்லியின் விக்யான் பவனில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியிருப்பதாவது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைவதை முன்னிட்டு, அதற்கு முன்பே, தேர்தலை நடத்தி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

4,809 பேர் தகுதி...

புதிய ஜனாதிபதி ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வார். மாநிலங்களவை தலைமைச் செயலாளர் பிரமோத் சந்திரமோடி தேர்தல் அதிகாரியாக செயல்படுவார். ஜனாதிபதி தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆக உள்ளது. 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டப்பேரவைகளில் உள்ள 4,033 எம்.எல்.ஏ.க்கள் என ஒட்டுமொத்தமாக 4,809 பேர் வாக்களிப்பார்கள். ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதியும் நடைபெறும். 

வேட்புமனு தாக்கல்...

ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் ஜூன் 15-ம் தேதி ஆரம்பம். வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 29-ம் தேதி. வேட்புமனு ஏற்கப்பட்ட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது எம்.எல்.ஏக்கள் வேட்பாளரை முன்மொழிய வேண்டும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30-ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜூலை 2-ம் தேதி கடைசி நாளாகும். ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 21-ம்தேதியும் நடைபெறம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி ஜூலை 25ம் தேதி பதவியேற்பார்.

57 மாநிலங்களவை... 

ஜனாதிபதி தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முக்கிய ஆலோசனை நடத்தி வரும் நிலையில், நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 10-ம் தேதி நிறைவு பெற்று, புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில எம்எல்ஏக்கள் வாக்களித்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யவிருக்கிறார்கள்.

தேர்தல் தேதி விவரம்:

  • 1) மனுதாக்கல் ஆரம்பம் - ஜூன் 15.
  • 2)மனுதாக்கல் முடிவு - ஜூன் 29.
  • 3) வேட்புமனு பரிசீலனை - ஜூன் 30.
  • 4) மனு திரும்பப்பெற கடைசி நாள் -  ஜூலை 2.
  • 5) தேர்தல் வாக்குப்பதிவு - ஜூலை 18.
  • 6) வாக்கு எண்ணிக்கை - ஜூலை 21.
  • 7) புதிய ஜனாதிபதி பதவியேற்பு -  ஜூலை 25.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து