முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: மத்திய அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை

வியாழக்கிழமை, 9 ஜூன் 2022      தமிழகம்
fisherman-2022-06-09

தமிழக மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் சுதந்திரமாக மீன் பிடிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நாகை மாவட்ட மீனவர்கள் வலியுறுத்தினார். 

மீன்கள் இனபெருக்கம் காரணமாக கடந்த ஏப்ரல் 15-ல் இருந்து வரும் 15-ம் தேதி வரை மீன் பிடிக்க தடை விதிக்கபட்டுள்ளது. இதனால் நாகை மாவட்டத்தை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட விசை படகுகள் கடலில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் மீனவர்கள் தங்களது வழக்கமான பணிகளை தொடங்க உள்ளனர். இதை ஒட்டி படகுகளுக்கு வண்ணம் பூசுதல், இன்ஜின் மற்றும் வலைகளை சரிசெய்வது போன்ற பராமத்து பணிகளில் அவர்கள் மும்முரம் கட்டி வருகின்றனர். படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நிக்க சுமார் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை கடன் வாங்கி பராமத்து பணிகளை மேற்கொள்ளுவதாக நாகை மீனவர்கள் தெரிவித்துள்ளார்.

எனவே பழுதுகளை நிக்க புதுச்சேரி அரசு ரூ. 30,000 நிவாரணம் வழங்குவது போல், தமிழ்நாடு அரசும் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன்  இலங்கை படையினர் அச்சுறுத்தால் இல்லாமல் இந்திய கடல் எல்லையில் சுதந்திரமாக மீன் பிடிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வளியுறுத்தியுள்ளனார். தடை காலம் முடிவதற்குள் படகுகளை சேரி செய்து உரிமையாளர்கள் இடம் ஒப்படைப்பதற்க்காக கூடுதலாக உழைத்து வருவதாக அவர்கள் தெரிவித்துயுள்ளனார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து