முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி ராம்நாத் 2 நாள் பயணமாக ஜம்மு சென்றார்

வியாழக்கிழமை, 9 ஜூன் 2022      இந்தியா
ramnathgovind-2022-06-09

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தன் மனைவி சவிதா கோவிந்துடன் இரண்டு நாள் பயணமாக நேற்று ஜம்மு சென்றார்.

துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தலைமைச் செயலாளர் ஏ.கே.மேத்தா, காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங், ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் சிவில் நிர்வாகத்தினர் குடியரசுத் தலைவரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.  ஜம்முவில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தின்(ஐஐஎம்) ஐந்தாவது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி உரையாற்றுகிறார். மேலும்,  நிறுவனத்தில் பன்முகத்தன்மைக் கலத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

பட்டமளிப்பு விழாவில் 77 பெண்கள் உள்பட 214 மாணவர்களுக்கு எம்பிஏ (முதுகலை வணிக நிர்வாகம்) பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்கின்றனர். இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி மற்றும் தலித் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் (டிஐசிசிஐ) தலைவர் ரவி குமார் நர்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து