முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டணப்பிரவேசத்தை தி.மு.க. திட்டமிட்டே தடை செய்தது : எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2022      தமிழகம்
EPS 2022 06 10

Source: provided

மயிலாடுதுறை : தருமபுரம் ஆதீனத்தில் 500 ஆண்டு காலமாக நடந்து வந்த பட்டணப்பிரவேசத்தை தி.மு.க. திட்டமிட்டே தடை செய்ய உத்தரவு பிறப்பித்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை தருமபுரம் ஆதீனத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு ஆதீன நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  அப்போது, கோபூஜை செய்து, பசு, காளை மற்றும் ஒட்டகத்துக்கு எடப்பாடி பழனிசாமி கீரை, வேப்பிலை ஆகியவற்றை வழங்கினார். 

தொடர்ந்து, ஆதீனத் திருமடத்துக்குள் சென்ற எடப்பாடி பழனிசாமி, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றார். அவருக்கு குருமகா சந்நிதானம் நினைவுப்பரிசினை வழங்கி அருளாசி கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி,  

அறநிலையத்துறையினரின் ஆய்வுக்கு சிதம்பரம் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு மத சம்பந்தமான, கோயில் சம்பந்தமான விஷயங்களில் முழு விபரம் கிடைத்த பின்புதான் கருத்து கூறமுடியும்.  ஆதீனங்களின் மரபுகளில் மூக்கினை நுழைக்க தி.மு.க. அரசு முயற்சிக்கிறது. 500 ஆண்டு காலமாக நடந்துவரும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி ஏற்கெனவே இருந்து தி.மு.க. அரசிலும், அ.தி.மு.க. அரசிலும் எந்த தடையும் இல்லை.

ஆனால் தற்போதைய தி.மு.க. அரசு திட்டமிட்டே பட்டணப்பிரவேசத்துக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து சட்டப்பேரவையில் அ.தி.மு.க. கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் அனைத்துத் தரப்பினரும் தெரிவித்த எதிர்ப்பைத் தொடர்ந்து இறங்கி வந்து மீண்டும் நடத்த அனுமதியளித்தது.  தமிழகத்தில் ஆளும் கட்சியை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் எதிர்கட்சிதான். ஆனால் பிரதான எதிர்கட்சியாக உள்ளது அ.தி.மு.க. மட்டும்தான் என்றார்.

இதில், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன், மா.சக்தி, மாவட்ட முன்னாள் செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், ஒன்றிய செயலாளர் பா.சந்தோஷ்குமார், நகர செயலாளர் எஸ்.செந்தமிழன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து