முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா-வங்கதேசம் இடையே மீண்டும் பஸ் போக்குவரத்து சேவை

வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2022      இந்தியா
India-Bangladesh 2022 06 10

Source: provided

கொல்கத்தா : 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா-வங்கதேசம் இடையே மீண்டும் பேருந்து போக்குவரத்து சேவை மீண்டும் செயல்பட துவங்கியது. 

கடந்த 2020-ம் ஆண்டு  கொரோனா தொற்று பரவல் தீவிரமானதால், இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ரயில், பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் கடந்த மே 29-ம் தேதி முதல் சில இடங்களில் தொடங்கி உள்ளன. இதனால் 2 நாட்டு பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் வங்கதேசத்துக்கான பயணிகள் ரயில் சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து நேற்று  காலை கொல்கத்தாவிற்கு முதல் பேருந்து சேவை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

முன்னதாக பேருந்து சேவைகள் நிறுத்தப்படுவதற்கு முன், டாக்கா - கொல்கத்தா - டாக்கா, டாக்கா - அகர்தலா - டாக்கா, டாக்கா - சில்ஹெட் - ஷில்லாங் - கவுகாத்தி - டாக்கா, அகர்தலா - டாக்கா - கொல்கத்தா -அகர்தலா மற்றும் டாக்கா - குல்னா - கொல்கத்தா - டாக்கா ஆகிய ஐந்து எல்லை கடந்த வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து