முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை : ராமஜெயம் கொலை வழக்கில் 2-வது விசாரணை அறிக்கையை சிறப்பு புலனாய்வு பிரிவு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.

வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2022      தமிழகம்
Chennai-High-Court 2021 3

Source: provided

தி.மு.க. முதன்மைசெயலாளரும், நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர், கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம், கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அப்போதைய திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தலைமையில், 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் சரிவர துப்பு கிடைக்காததால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.

இதனிடையே ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் ராமச்சந்திரன், இந்த வழக்கை, தமிழக காவல்துறை விசாரிக்க வேண்டும்  என்று ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து, வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும், 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அரியலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதன், சி.பி.ஐ. துணை காவல் கண்காணிப்பாளர் ரவி ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு கடந்த ஏப்ரல் மாதம் முதற்கட்ட அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி சீதாராமன் முன்பு விசாரணைக்கு வந்தபோது சிறப்பு புலனாய்வு குழுவின் 2-வது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தொடர்ந்து வருவதால் அடுத்தகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சீதாராமன் 4 வார கால அவகாசம் வழங்கி இது தொடர்பான வழக்கு விசாரணையை ஜூலை 13-ம் தேதி தள்ளிவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து