முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு: பணியில் இல்லாத மருத்துவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2022      தமிழகம்
Ma Subramanian 2022 06 10

Source: provided

மதுரை : மதுரை, வாடிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், பணியில் இல்லாத மருத்துவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மதுரை மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சரின் திடீர் ஆய்வை சற்று எதிர்பார்க்காத ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். 

நோயாளிகள் மருந்து வாங்கும் இடங்கள் மற்றும் மருத்துவமனை வளாகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அதன் பின்னர் மருத்துவர் இருக்கும் இடத்தை சென்று பார்த்தார். அப்போது மருத்துவர் பூபேஷ்குமார் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மருத்துவர் பூபேஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார். அதையடுத்து பணி நேரத்தில் பணியில் இல்லாததால் மருத்துவர் பூபேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்ய உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். 

இதற்கிடையே, மதுரை விமானநிலையத்தில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். நோய் தடுப்பு பணி, பரிசோதனை மையம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கான மருத்துவ பரிசோதனை, மருத்துவ பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். மதுரை மாவட்ட சிறப்பு அதிகாரி உள்ளிட்டோர் ஆய்வின் போது அமைச்சருடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து