முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை

சனிக்கிழமை, 11 ஜூன் 2022      தமிழகம்
Anpil Makes 2021 07 26

Source: provided

சென்னை : குழந்தை தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக தமிழகம் விளங்க அனைவரும் உறுதியேற்போம் என்று  குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

தமிழகத்தில் உள்ள 18 வயதிற்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பள்ளிக்குச் சென்று கல்வி, கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டுகளில் கவனம் செலுத்தி தம் அறிவைப் பெருக்கி புதிய வரலாறு படைக்கும் சிற்பிகளாகத் திகழவேண்டும் என்பது தமிழக முதல்வரின் கனவு. இதற்கு செயல்வடிவம் வழங்கும் வகையில் இவ்வரசு பல்வேறு சிறப்பான செயல் திட்டங்களை வகுத்து திறம்பட செயல்படுத்தி வருகிறது. 

புதிதாய்ப் பிறக்கும் இக்கல்வியாண்டில் புதிய உத்வேகத்துடன் செயல்பட அரசு வழங்கும் விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், மடிக்கணினி, கல்வி உபகரணங்கள், புத்தகப் பை, முட்டையுடன் கூடிய சத்தான மதிய உணவு, மிதிவண்டி, கட்டணமில்லாப் பேருந்து வசதி, உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு  மாதாந்திர ஊக்கத் தொகை மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் மகத்தான திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அனைத்துக் குழந்தைகளும் முழுமையாக பயன்படுத்தி தங்களை மேம்படுத்தி சமுதாய வளர்ச்சிக்கு வித்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். 

மாணவப் பருவம் மாணவருக்கே, குழந்தைப் பருவம் குழந்தைகளுக்கே என்பதை உறுதி செய்திடும் வகையில், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றிட நமது சிறந்த கல்வி முறையினை பயன்படுத்தி ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிட குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு வாருங்கள் என அன்புடன் இருகரம் நீட்டி அழைக்கின்றேன்.

பெற்றோர் அனைவரும் பள்ளி செல்லும் வயதுடைய தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி பெருமைப்படுத்த வேண்டும் என்றும்,  தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளை பணிக்கு அமர்த்த மாட்டோம் என்றும், ஆசிரியர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணி செய்து தரமான கல்வியினை மாணவர்களுக்கு வழங்குவோம் என்றும், குழந்தைத் தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க இடைநில்லாக் கல்வி, தடையில்லா வளர்ச்சி என்ற இலக்கினை நோக்கிப் பயணிப்போம் என்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தன்று அனைவரும் உறுதியேற்போம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து