முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக 8,329 பேருக்கு தொற்று: நாட்டில் 8 ஆயிரத்தை கடந்தது : தினசரி கொரோனா பாதிப்பு..!

சனிக்கிழமை, 11 ஜூன் 2022      இந்தியா
India-Corona 2022 06 11

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 8,000-ஐ கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கொரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்கள்: இந்தியாவில் இதுவரை 194.92 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 40,370 ஆக உள்ளது. கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.09 % உள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.69 % ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,216 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவிலிருந்து சுமார் 4,26,48,308 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.41 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 1.75% உள்ளது. இதுவரை மொத்தம் 85.45 கோடி கரோணா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 3,44,994 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து