முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளத்தூர் தொகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சனிக்கிழமை, 11 ஜூன் 2022      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமாலியா லேன் திட்டப்பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ. 17.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள  130 புதிய  அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், மறுகுடியமர்வு செய்யவுள்ள  128 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக   தலா ரூ. 16,000 வீதம், மொத்தம்  20.48 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்.                                                                                                                                                                           

கொளத்தூர், ஜமாலியா லேன் பகுதியில் 1976-ம் ஆண்டில் 326 சதுர அடியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்ட 128 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய  குடியிருப்புகளை அகற்றி ரூ. 17.63 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் கூடிய 130 புதிய குடியிருப்புகள் கட்டப்படவுள்ளது.            

மேலும், ஒவ்வொரு குடியிருப்புகளும் பல்நோக்கு அறை, உறங்கும் அறை, சமையலறை, தனித்தனியே குளியலறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகளுடன் 413 சதுர அடியில் அமைய உள்ளது.  ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார வசதி, குடிநீர் வசதியும், ஒவ்வொரு பிளாக்கிலும் மின் தூக்கி (Lift) மற்றும் மின்னாக்கி (Generator) வசதிகள், மழைநீர் கால்வாய்கள் மற்றும் கான்கிரிட் சாலைகள், தெரு விளக்குகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. 

இங்கு கட்டப்படும் குடியிருப்புகள் ஏற்கனவே இருந்த 128 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.  மீதமுள்ள 2 குடியிருப்புகள், அங்கன்வாடி மையத்திற்கு  வழங்கப்படும்.  ஒரு குடியிருப்பிற்கான கட்டுமான தொகை ரூ. 13.56 லட்சம் ஆகும்.  இக்குடியிருப்புக்கு மாநில அரசு மானியம் ரூ. 10.56 லட்சம், ஒன்றிய அரசு மானியம் ரூ. 1.50 லட்சம். ஏற்கனவே இங்கு வசிக்கும்  மறுகட்டுமான பயனாளிகளுக்கான பங்களிப்பு தொகை ரூ.1.36 லட்சம் என நிர்ணயித்து அரசு ஆணையிட்டுள்ளது. 

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யவுள்ள குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகையினை 8,000 ரூபாயிலிருந்து 24,000 ரூபாயாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உயர்த்தி வழங்க உத்தரவிட்டார்.  அதன்படி, ஜமாலியா லேன் திட்டப்பகுதியில் மறுகுடியமர்வு செய்யவுள்ள 128 குடியிருப்புதாரர்களுக்கு ஏற்கனவே தலா ரூ. 8000 கருணைத் தொகை வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள நிலுவைத் தொகையான ரூ. 16,000 வீதம், மொத்தம்  20.48 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் நேற்று குடியிருப்புதாரர்களுக்கு வழங்கினார். 

இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து