முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திட்டமிட்டபடி பள்ளிகள் நாளை திறப்பு: தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை : அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

சனிக்கிழமை, 11 ஜூன் 2022      தமிழகம்
Anpil Makes 2021 07 26

Source: provided

கும்பகோணம் : தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 13-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கப்படும் போது பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கும்பகோணத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது., கோடை விடுமுறை முடிந்து வரும் 13-ம் தேதி (நாளை) பள்ளிகள் அனைத்தும் திட்டமிட்டபடி திறக்கப்படும்.பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் சரியாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அவ்வாறு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து