முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் மீண்டும் திறப்பு : பள்ளி வளாகங்களை தூய்மை செய்யும் பணிகள் தீவிரம்

சனிக்கிழமை, 11 ஜூன் 2022      தமிழகம்
Student 2022-06-06

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளி மற்றும் வளாகங்களை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

கடந்த கொரோனா காலகட்டத்தில் குறைந்த நாட்களே பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடந்தன. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (13ம் தேதி) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.

பள்ளி வளாக தூய்மை பணி, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பள்ளிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 நாட்களாக மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் முன்கூட்டியே திறக்கப்படுவதால் பாடத்திட்டம் முழுமையாக இடம்பெறவுள்ளது.

முன்னதாக நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டிருக்கிறது. அனைத்துப் பள்ளிகளையும் தூய்மைப்பணிகளை முடித்து மாணவர்களை வரவேற்க தயார்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் மின் இணைப்புகளில் மின் கசிவு, மின் கோளாறுகள்  ஏதேனும் இருக்கிறதா என்று என்று சோதனை நடத்தி, அவ்வாறு இருந்தால் சீர் செய்ய வேண்டும்.

சத்துணவுக் கூடங்களை சுத்தப்படுத்தி, சுகாதாரமாண உணவு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பள்ளிகள் திறந்ததும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட நூல்கள் பெறப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். பள்ளிப் பேருந்துகள் அனைத்தும் முறையான சோதனைக்கு உள்படுத்தப்பட்டு, தகுதிச் சான்றிதழ் பெற்ற பிறகே மாணவ, மாணவிகளை அழைத்து வரப் பயன்படுத்தப்பட  வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து