முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு எதிரொலி: சென்னை மற்றும் பிற ஊர்களிலிருந்து கூடுதலாக 1,450 பேருந்துகள் இயக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2022      தமிழகம்
Bus 2022 02 16

Source: provided

சென்னை : தமிழகத்தில் இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்க உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு நேற்று (ஜூன் 12) கூடுதலாக 1,450 பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களில் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2100 பேருந்துகள் உடன் கூடுதலாக 400 பேருந்துகள் கடந்த வாரம் இயக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்க உள்ளதால், நேற்று (12.06.2022) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு கூடுதலாக 1,450 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து