முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி வேட்பாளர் யார்? - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2022      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவின் 15 வது குடியரசு ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால்,அடுத்த ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில்,வருகின்ற ஜூலை மாதம் ஜனாதிபதி யார் என்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ள வேளையில்,தி.மு.க 133 எம்எல்ஏக்கள் 34 எம்பிக்கள் பலத்துடன் உள்ளது. இதற்கிடையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாடு முழுவதும் உள்ள 22 கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். 

அக்கடிதத்தில் அவர் கூறியதாவது., ஜனாதிபதி தேர்தலுக்கு நாம் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். அதற்கு தங்களது கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்களின் பங்களிப்பு வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தார். 

இந்நிலையில்,ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முக்கிய ஆலோசனையில் நேற்று ஈடுபட்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், அமைச்சர்கள் கே.என் நேரு, பொன்முடி, நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து