முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் அ.தி.மு.க.தான் பிரதான எதிர்க்கட்சி : ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2022      தமிழகம்
OPS 2022 01 28

Source: provided

சென்னை : சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, மிகச் சிறந்த எதிர்க்கட்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக, மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக அ.தி.மு.க செயல்படுகிறது" என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் தாங்கள் தான் எதிர்க்கட்சியாக செயல்படுவதாக பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் சமீப காலமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற செயல்களால் அ.தி.மு.க.வை ஒழித்துவிட்டு அதன் இடத்தை பிடிக்க பாரதிய ஜனதா முயற்சித்து வருவதாக அ.தி.மு.க மூத்த தலைவர் பொன்னையன் குற்றம் சாட்டியிருந்தார்.

தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக தாங்கள் தான் செயல்பட்டு வருவதாக வெளிக்காட்டி கொள்வதில் அ.தி.மு.க பாஜகவுக்கு இடையே மறைமுக போட்டி நிலவி வருவதாக அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக சட்டமன்றத்திலும், சட்டமன்றத்திற்கு வெளியிலும் சிறந்த எதிர்க்கட்சியாக அ.தி.மு.க செயலாற்றி வருவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் செயல்பாடுகளில் அ.தி.மு.க பின்தங்கி இருப்பது போன்ற மாயத்தோற்றம் சமீப காலமாக உருவாக்கப்பட்டு வருவதாக ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகள் கவனத்திற்கு எடுத்துச்சென்று தீர்வு காணும் இயக்கமாக அ.தி.மு.க உள்ளது. மக்களின் முக்கிய பிரச்சனைகளுக்காக பல முறை பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதாக அறிக்கையில் ஓ.பி.எஸ் கூறியுள்ளார். மக்களின் பிரச்சனைகளை சுட்டிக் காட்டி பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

தி.மு.க. அரசை பொறுத்தவரை, மக்கள் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல், மதம் சார்ந்த விஷயங்களில் மூக்கை நுழைத்து பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டம்., இல்லையெனில், இதுவே ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகிவிடும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து