முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்நியச்செலாவணி கையிருப்பு ரூ46.28 லட்சம் கோடியாக சரிவு : இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2022      இந்தியா
Reserve-Bank 2022-06-05

Source: provided

புதுடெல்லி : இந்தியாவின் அந்நியச்செலாவணி கையிருப்பு, கடந்த வாரத்தில் ரூ.46.28 லட்சம் கோடியாக (60,106 கோடி டாலா்) சரிவடைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- கடந்த ஜூன் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 60,106 கோடி டாலராக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் இந்த கையிருப்பு 60,136 கோடி டாலராக இருந்த நிலையில், 30 கோடி டாலா் குறைந்துள்ளது. மேலும், கடந்த மே மாதம் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 59,751 கோடி டாலராக காணப்பட்டது. 

அந்நியச்செலாவணி சொத்து மதிப்பில் (எஃப்சிஏ) ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியே அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாக சரிவடைந்ததற்கு முக்கிய காரணம். ஏனெனில், ஒட்டுமொத்த கையிருப்பில் இதன் பங்களிப்பே அதிகமாக உள்ளது. மேலும், தங்கத்தின் கையிருப்பும் 7 கோடி டாலா் குறைந்து 4,084 கோடி டாலராக உள்ளது. இவ்வாறு ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள வாராந்திர புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து