முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு: அமெரிக்காவில் காதலனை கார் ஏற்றி கொன்ற காதலி..!

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2022      உலகம்
Car 2022 06 12

Source: provided

வாஷிங்டன் ; அமெரிக்காவில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த தனது காதலனை கார் ஏற்றி கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்தனர். 

அமெரிக்காவில் தனது காதலனை ஆப்பிள் ஏர்டேக் கருவி மூலம் பின்தொடர்ந்து கண்காணித்த காதலி அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை உறுதி செய்த பின்னர் காதலி அவரை கார் ஏற்றி கொலை செய்துள்ளார். இண்டியானாபோலிசை சேர்ந்த 26 வயதான கெய்லின் மோரிஸ் என்ற பெண் ஆண்ட்ரே ஸ்மித் என்பவரை காதலித்து வந்த நிலையில் அவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கெய்லினுக்கு சந்தேகம் வந்துள்ளது. 

இதையடுத்து காதலன் செல்லும் இடங்களை அறிய ஏர்டேக் கருவியை அவர் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், மதுபானக் விடுதி ஒன்றில் காதலன் இருப்பதை அறிந்த அப்பெண் அங்கு நுழைந்ததும் வேறு ஒரு பெண்ணுடன் அவர் பேசிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த காதலி அங்கு வாக்குவாதம் செய்தபின் காதலன் பாரை விட்டு வெளியே வந்தபோது காரை வேகமாக இயக்கி அவரை கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து